23 ஏப்ரல், 2009

ஏ கடலே
- Kavi Perarasu Vairamuthu
ஏ கடலே!உன் கரையில் இதுவரையில்கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகின்றோம்ஏ கடலேநீ முத்துக்களின் பள்ளத்தாக்காமுதுமக்கள் தாழியா?
நீ கலங்களின் மைதானமா?பிணங்களின் மயானமா?
துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டுநீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?
உன் அலைஎத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?
நீ தேவதை இல்லையாபழிவாங்கும் பிசாசா?
உன் மீன்களை நாங்கள் கூறுகட்டியதற்காஎங்கள் பிணங்களை நீகூறுகட்டுகிறாய்?
நீ அனுப்பியதுசுனாமி அல்லபிரளயத்தின் பினாமி
பேய்ப்பசி உன்பசிபெரும்பசி
குமரிக்கண்டம் கொண்டாய்கபாடபுரம் தின்றாய்பூம்புகார் உண்டாய்
போதாதென்றுஉன் டினோசார் அலைகளை அனுப்பிஎங்கள் பிஞ்சுக்குழந்தைகளின்பிள்ளைக்கறி கேட்கிறாய்
அடக்கம் செய்ய ஆளிராதென்றாபுதை மணலுக்குள்புதைத்துவிட்டே போய்விட்டாய்?
என்னபிழை செய்தோம்?ஏன் எம்மைப் பலிகொண்டாய்?
சுமத்ராவை வென்றான்சோழமன்னன் ராஜராஜன்
அந்தப் பழிதீர்க்கவாசுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்சோழநாடு கொண்டாய்?
காணும் கரைதோறும்கட்டுமரங்கள் காணோம்குழவிகளும் காணோம்கிழவிகளும் காணோம்தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்
பிணங்களை அடையாளம்காட்டப்பெற்றவளைத் தேடினோம்அவள்பிணத்தையே காணோம்
மரணத்தின் மீதேமரியாதை போய்விட்டதுபறவைகள்மொத்தமாய் வந்தால் அழகுமரணம்தனியே வந்தால் அழகுமொத்தமாய் வரும் மரணத்தின் மீதுசுத்தமாய் மரியாதையில்லை
அழுதது போதும்எழுவோம்அந்தமொத்தப் பிணக்குழியில்நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்
இயற்கையின் சவாலில்அழிவுண்டால் விலங்கு
இயற்கையின் சவாலைஎதிர்கொண்டால் மனிதன்
நாம் மனிதர்கள்எதிர்கோள்வோம்
மீண்டும் கடலேமீன்பிடிக்க வருவோம்
ஆனால்உனக்குள் அஸ்திகரைக்கஒருபோதும் வரமாட்டோம்

குடம்

நீ
இடுப்பில்
வைத்த
குடம் வாயகன்றது
ஆனந்தமாய்
இருந்தும்
பிரிவை எண்ணி
தளும்பும் அதன்
மனம்

6 ஏப்ரல், 2009

உதிரும் சிறகுகள் - அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்தமுன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ இருளைமோகித்துஏதோ சாளர வழியேநுழைந்துசிறகுகள்உதிர்க்கப் போவோம்நாம். அப்துல் ரகுமான்தொகுப்பு - சுட்டுவிரல்
ஆறாவது நிலம் - கரிகாலன்
காற்று செல்லும்திசையில் பறக்கிறதுஒரு இலைஒரு இறகுமரமோ பறவையோதன் இழப்பைபொருட்படுத்துவதில்லை**********************நேற்று ஏற்பட்டமனத்தாங்கலைசெடிக்கு நீர்பாய்ச்சியஇடத்தில் விட்டேன்அக்கேடு பின் உரமாகிவிட்டதுமனதிலேற்பட்ட வெற்றிடத்தில்அச்செடி தன் புதிய இலையைதுளிர்த்தது.- கரிகாலன் (தொகுப்பு - ஆறாவது நிலம்)
அது குழந்தை - சுந்தர ராமசாமி
மொழியை வலையாக மாற்றிவீசிப் பிடிக்க முயன்றபோதுகிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மைபிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்பலன் இல்லைமூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்பின் ஏதேதோ யோசனைகள்தூக்கம்கண் விழித்ததும் குழந்தைப்போல்மார்பில் அமர்ந்திருந்தது உண்மைமௌனம் பிடிக்கும் என்றதுயோசனை பிடிக்கும் என்றதுஅதிகம் பிடிப்பதுஅன்புதான் என்று சொல்லிச் சிரித்தது- சுந்தர ராமசாமி (தொகுப்பு - சுந்தர ராமசாமி கவிதைகள்)
சற்று முன்பிருந்த அன்பும்புகையிலை விடுக்கும் புகையும்சிறுகச் சிறுகவிடுத்துச் செல்வதுசாம்பலை மட்டுமே****நதியோட்டத்தில்மிதந்து செல்லும் கிளையில்பாடிகொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும்****பாறைக்கருகில் நிற்கும்ஊசியிலை மரமும் தன்ஞாபகங்களைக் கொண்டிருக்கிறதுபோலும் ; ஓர்ஆயிரம் வருடங்கள் கழித்தும்அதன் கிளைகள்தரையைநோக்கிஎப்படி வளைகின்றன பாரேன்.****திட்டவட்டமான விதிகள் இல்லைஜன்னலை எப்போதுதிறந்து வைப்பதுஎப்போது மூடுவது என்பது பற்றிஇதெல்லாம்,நிலவோ பனியோதம் நிழல்களை எவ்விதம்படியவைக்கின்றன என்பதைப்பொறுத்தது****அவன்வனத்தில் நுழையும்போதுபுற்கள் நசுங்குவதில்லைநீரில் இறங்குகையில்சிற்றலையும் எழுவதில்லை- ஜென் கவிதைகள் தமிழில் - யுவன் சந்திரசேகர்
திரும்பாத முத்தம் - மனுஷ்ய புத்திரன்
திரும்பாத முத்தம்————————————–இடப் படாத முத்தமொன்றுஇரவின் முடிவற்ற கரிய தோள்களில்வந்தமர்ந்தபோதுபனிக் காலத்தின் ஆயிரம்உறைந்த கண்கள்அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்தன் கூச்சத்தின்இறகுகளைப் படபடவெனஅடித்துக்கொண்டது
திசை தப்பி வந்தவேறொரு உலகத்தின் பறவையெனஅன்பின் துயர வெளியின் மேல் அதுபறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்குதான்அந்த கணம் வந்தமர்ந்தஇடம் குறித்துஎந்த யோசனையுமில்லைஒரு தந்திரமில்லைஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்நான் அதைப் பற்றிக்கொள்ளவிரும்பினேன்
இடப்படாத அந்த [...]