1 மார்ச், 2009

தெரு விளக்கே

உயர்ந்து
நின்று
தெருவங்கும்
ஒளி பரப்பி
தலை குனிந்து
நிற்கும்
தெரு விளக்கே
மனித
வாழ்வென்றும்
வாழ்கிறோம்
எப்போதும்
இருண்டு

மழை

எக்கணமும்
மழை
பொழியலாம்
உனக்கு
இடம்
கிடைக்கும்
நனையாது
இருக்க
உன்னை தவறவிட்ட
மழை துளிகள்
கண்ணீரின் வெள்ளமென
அடித்து ஓடியது
தெருவெங்கும்
என்னை நனைத்து
உன்
விரல் பட்ட
கை
இன்னும்
மணக்கிறது
நொடிக்கொருமுறை
சுவாசிக்கிறேன்
எங்கும்
உன் மனம்
கைகள்
அழகானது
ரேகைகள்
பூ பூத்தது
உன்
தொடுகையால்
பொற்கை
பண்டியனனேன்
என் கையை
நானே
ரசித்தேன்
தொடுகையின்
கணங்களை
கைகளில்
சேமித்தேன்
கடவுளின்
ச்பரிசமென
துள்ளி குதித்தேன்
அறியாது
பட்ட
உன் கை
புரட்டியது
இத்தனை
மாற்றங்களும்

அறிய பூச்சி

நகரும்
மலரென
விழுந்தது உன்
கண்ணில்
அறியா சிறு
பூச்சி
உணவென
உன் கண்கள்
உண்பது
உயிர்களைஎன