6 ஏப்ரல், 2009

உதிரும் சிறகுகள் - அப்துல் ரகுமான்
மழை ஓய்ந்தமுன்னிரவில்சாளரத்தின் வழியேஅறையில் புகுந்துமின் விளக்கைமொய்த்துமுட்டி மோதிசிறகுகள் உதிர்த்து விழும்ஈசல் கூட்டம்காலையில்திட்டியபடியேசெத்த உடல்களோடுசிறகுகள் கூட்டிக்குப்பையில் எறிந்து -ஏதோ இருளைமோகித்துஏதோ சாளர வழியேநுழைந்துசிறகுகள்உதிர்க்கப் போவோம்நாம். அப்துல் ரகுமான்தொகுப்பு - சுட்டுவிரல்
ஆறாவது நிலம் - கரிகாலன்
காற்று செல்லும்திசையில் பறக்கிறதுஒரு இலைஒரு இறகுமரமோ பறவையோதன் இழப்பைபொருட்படுத்துவதில்லை**********************நேற்று ஏற்பட்டமனத்தாங்கலைசெடிக்கு நீர்பாய்ச்சியஇடத்தில் விட்டேன்அக்கேடு பின் உரமாகிவிட்டதுமனதிலேற்பட்ட வெற்றிடத்தில்அச்செடி தன் புதிய இலையைதுளிர்த்தது.- கரிகாலன் (தொகுப்பு - ஆறாவது நிலம்)
அது குழந்தை - சுந்தர ராமசாமி
மொழியை வலையாக மாற்றிவீசிப் பிடிக்க முயன்றபோதுகிழித்துக்கொண்டு வெளியே ஓடிற்று உண்மைபிடிக்கப் பின்னால் பாய்ந்தேன்பலன் இல்லைமூச்சுத் திணறி சோர்ந்த சரிந்தேன்பின் ஏதேதோ யோசனைகள்தூக்கம்கண் விழித்ததும் குழந்தைப்போல்மார்பில் அமர்ந்திருந்தது உண்மைமௌனம் பிடிக்கும் என்றதுயோசனை பிடிக்கும் என்றதுஅதிகம் பிடிப்பதுஅன்புதான் என்று சொல்லிச் சிரித்தது- சுந்தர ராமசாமி (தொகுப்பு - சுந்தர ராமசாமி கவிதைகள்)
சற்று முன்பிருந்த அன்பும்புகையிலை விடுக்கும் புகையும்சிறுகச் சிறுகவிடுத்துச் செல்வதுசாம்பலை மட்டுமே****நதியோட்டத்தில்மிதந்து செல்லும் கிளையில்பாடிகொண்டிருக்கின்றனபூச்சிகள், இன்னமும்****பாறைக்கருகில் நிற்கும்ஊசியிலை மரமும் தன்ஞாபகங்களைக் கொண்டிருக்கிறதுபோலும் ; ஓர்ஆயிரம் வருடங்கள் கழித்தும்அதன் கிளைகள்தரையைநோக்கிஎப்படி வளைகின்றன பாரேன்.****திட்டவட்டமான விதிகள் இல்லைஜன்னலை எப்போதுதிறந்து வைப்பதுஎப்போது மூடுவது என்பது பற்றிஇதெல்லாம்,நிலவோ பனியோதம் நிழல்களை எவ்விதம்படியவைக்கின்றன என்பதைப்பொறுத்தது****அவன்வனத்தில் நுழையும்போதுபுற்கள் நசுங்குவதில்லைநீரில் இறங்குகையில்சிற்றலையும் எழுவதில்லை- ஜென் கவிதைகள் தமிழில் - யுவன் சந்திரசேகர்
திரும்பாத முத்தம் - மனுஷ்ய புத்திரன்
திரும்பாத முத்தம்————————————–இடப் படாத முத்தமொன்றுஇரவின் முடிவற்ற கரிய தோள்களில்வந்தமர்ந்தபோதுபனிக் காலத்தின் ஆயிரம்உறைந்த கண்கள்அதை உற்றுப் பார்த்தன
இடப்படாத அந்த முத்தம்தன் கூச்சத்தின்இறகுகளைப் படபடவெனஅடித்துக்கொண்டது
திசை தப்பி வந்தவேறொரு உலகத்தின் பறவையெனஅன்பின் துயர வெளியின் மேல் அதுபறந்து பறந்து களைத்துப்போயிருந்தது
அதற்குதான்அந்த கணம் வந்தமர்ந்தஇடம் குறித்துஎந்த யோசனையுமில்லைஒரு தந்திரமில்லைஒரு கனவு இல்லை
நடுங்கும் கைகளால்நான் அதைப் பற்றிக்கொள்ளவிரும்பினேன்
இடப்படாத அந்த [...]
போடி போடி கல்நெஞ்சி!
மார்புக்கு ஆடைமனசுக்கு பூட்டு
ஒரே பொழுதில்இரண்டும் தரித்தவளே!
காதல் தானடிஎன்மீதுனக்கு?
பிறகேன்வல்லரசின்ராணுவ ரகசியம்போல்வெளியிட மறுத்தாய்?
தூக்குக்கைதியின்கடைசி ஆசைபோல்பிரியும்போது ஏன்பிரியம் உரைத்தாய்?
நஞ்சு வைத்திருக்கும்சாகாத நாகம்போல்இத்தனை காதல் வைத்துஎப்படி உயிர் தரித்தாய்?
இப்போதும் கூடநீயாய்ச் சொல்லவில்லைநானாய்க் கண்டறிந்தேன்
இமைகளின் தாழ்வில் -உடைகளின் தளர்வில் -
என்னோடு பேசமட்டும்குயிலாகும் உன்குரலில் -
வாக்கியம் உட்காரும்நீளத்தில் -வார்த்தைகளுக்குள் விட்டஇடைவெளியில் -
சிருங்காரம் சுட்டபெருமூச்சில்
வறண்ட உதட்டின்வரிப்பள்ளங்களில் -
நானாய்த்தான் கண்டறிந்தேன்காதல் மசக்கையில்கசங்கும் உன் இதயத்தை.
சேமித்த கற்புசிந்தியா போயிருக்கும்?
நீயாக கேட்டிருந்தால்நெஞ்சு மலர்ந்திருப்பேன்
உண்டென்றால்உண்டென்பேன்இல்லையென்றால்இல்லையென்பேன்
இப்போதும் கூடதேசத்துரோகமென்பதைஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி
உள்ளாடும் காதலைஒளிக்கவே பார்க்கிறாய்
காதலில்தயக்கம் தண்டனைக்குரியதுவினாடி கூடவிரயமாதல் கூடாது
காலப் பெருங்கடலில்நழுவி விழும் கணங்களைமீண்டும் சேகரிக்கஒண்ணுமா உன்னால்
இந்தியப் பெண்ணே!இதுவுன்பலவீனமான பலமா?பலமான பலவீனமா?
என்வாத்தியக்கூடம்வரைவந்தவளே
உன் விரல்கள்என் வீணைதடவ வந்தனவா?
இல்லைபுல்லாங்குழல் துளைகளைப்பொத்திப்போக வந்தனவா?
என் நந்தவனத்தைக்கிழித்துக்கொண்டோடிச்சட்டென்று வற்றிவிட்ட நதி நீ
உன் காதலறிந்த கணத்தில்என் பூமி பூக்களால் குலுங்கியது
நீ வணங்கிப் பிரிந்தவேளைஎன் இரவு நடுங்கியது
பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானேகாதலையே அறிவித்தாய்
இருபதா? முப்பதா?எத்தனை நிமிடம்?என் மார்பு தோய்ந்து நீஅழுததும் தொழுததும்
என் பாதியில்நீ நிறையவும்உன் பாதியில்நான் நிறையவும்வினாடித்துகள் ஒன்றுபோதுமே சிநேகிதி
நேரம் தூரம் என்றதத்துவம் தகர்த்தோம்
நிமிஷத்தின் புட்டிகளில்யுகங்களை அடைத்தோம்
ஆலிங்கனத்தில்அசைவற்றோம்
உணர்ச்சி பழையதுஉற்றது புதியது
இப்போதுகுவிந்த உதடுகள்குவிந்தபடிமுத்தமிட நீயில்லை
தழுவிய கைகள்தழுவியபடிசாய்ந்து கொள்ள நீயில்லை
என் மார்புக்கு வெளியேஆடும் என் இதயம்என் பொத்தானில் சுற்றியஉன் ஒற்றை முடியில்
உன் ஞாபக வெள்ளம்தேங்கி நிற்குதுமுட்டி அழுத்தி நீமுகம்பதித்த பள்ளத்தில்
தோட்டத்துப் பூவிலெல்லாம்நீ விட்டுப்போன வாசம்
புல்லோடு பனித்துளிகள்நீவந்துபோன அடையாளமாய்க்கொட்டிக் கிடக்கும்கொலுசுமணிகள்
நம் கார்காலம்தூறலோடு தொடங்கியதுவானவில்லோடு நின்றுவிட்டது
உன் வரவால்என் உயிரில் கொஞ்சம்செலவழிந்து விட்டது
இந்த உறவின் மிச்சம்சொல்லக்கூடாதசில நினைவுகளும்
சொல்லக்கூடியஒரு கவிதையும்.
- வைரமுத்து

வைரமுத்து கவிதை

பெயர் சொல்ல மாட்டேன்———————————-
மேகங்கள் எனைத்தொட்டுப் போனதுண்டு - சிலமின்னல்கள் எனை உரசிப் போனதுண்டுதேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு - மனம்சில்லென்று சிலபொழுது சிலிர்ததுண்டுமோகனமே உன்னைப்போல என்னையாரும் - என்மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லைஆகமொத்தம் என்நெஞ்சில் உன்னைப்போல - எரிஅமிலத்தை வீசியவர் எவரும் இல்லை
கண்மணியே உன்னைக்காண வைத்ததாலே - என்கண்களுக்கு அபிஷேகம் நடத்துகின்றேன்பொன்மகளே நீ போகும் பாதையெல்லாம் - தினம்பூஜைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன்விண்வெளியின் மேலேறி உந்தன் பேரை - காதல்வெறிகொண்டு கூவுதற்கு ஆசை கொண்டேன்பெண்ணழகே உனைத்தாங்கி நிற்பதாலே - இந்தப்பிரபஞ்சம் வாழ்கவென்று பாடுகின்றேன்
விதையோடு தொடங்குதடி விருட்சமெல்லாம் - துளிவிந்தோடு தொடங்குதடி உயிர்கள் எல்லாம்சதையோடு தொடங்குதடி காமம் எல்லாம் - ஒருதாலாட்டில் தொடங்குதடி கீதமெல்லாம்சிதையோடு தொடங்குதடி ஞானமெல்லாம் - சிறுசிந்தனையில் தோன்றுதடி புரட்சியெல்லாம்கதையோடு தோன்றுமடி இதிகாசங்கள் - உன்கண்ணோடு தொடங்குதடி எனது பாடல்
உலகத்தின் காதலெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉள்ளங்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் முத்தமெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉதடுகளில் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் உயிரெல்லாம் ஒன்றே ஒன்றே - அதுஉடல்கள் மாறிமாறிப் பயணம் போகும்உலகத்தின் சுகமெல்லாம் ஒன்றே ஒன்றே - என்உத்தரவுக் கிணங்கிவிடு புரிந்து போகும்
செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே - அடிதினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் - உன்செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் - அதுதெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்?எவ்வாறு கண்ணிரண்டில் கலந்து போனேன் - அடிஎவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்இவ்வாறு தனிமையிலே பேசிக் கொண்டே - என்இரவுகளைக் கவிதைகளாய் மொழிபெயர்த்தேன்
பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே - என்பிரியத்தை அதனால்நான் குறைக்கமாட்டேன்சரிந்துவிடும் அழகென்று தெரியும் பெண்ணே - என்சந்தோஷக் கலைகளைநான் நிறுத்த மாட்டேன்எரிந்துவிடும் உடலென்று தெரியும் பெண்ணே - என்இளமைக்குத் தீயிட்டே எரிக்க மாட்டேன்மரித்துவிடும் உறுப்பென்று தெரியும் பெண்ணே - என்வாழ்வில் நான் ஒரு துளியும் இழக்கமாட்டேன்
கண்ணிமையின் சாமரங்கள் வீசும் காற்றில் - என்காதல்மனம் துண்டுதுண்டாய் உடையக் கண்டேன்துண்டுதுண்டாய் உடைந்த மனத்துகளை எல்லாம் - அடிதூயவளே உனக்குள்ளே தொலைத்து விட்டேன்பொன்மகளே உனக்குள்ளே தொலைத்ததெல்லாம் - சுகபூஜைகொள்ளும் நேரத்தில் தேடிப் பார்த்தேன்கண்மணிஉன் கூந்தலுக்குள் கொஞ்சம் கண்டேன் - உன்கால்விரலின் பிளவுகளில் மிச்சம் கண்டேன்
கோடிகோடி ஜீவன்கள் சுகித்த பின்னும் - இன்னும்குறையாமல் வீசுதடி காற்றின் கூட்டம்கோடிகோடி ஜீவன்கள் தாகம் தீர்த்தும் - துளிகுறைந்தொன்றும் போகவில்லை காதல் தீர்த்தம்மூடிமூடி வைத்தாலும் விதைகள் எல்லாம் - மண்ணைமுட்டிமுட்டி முளைப்பதுதான் உயிரின் சாட்சிஓடிஓடிப் போகாதே ஊமைப்பெண்ணே - நாம்உயிரோடு வாழ்வதற்கு காதல் சாட்சி