1 மார்ச், 2009

உன்
விரல் பட்ட
கை
இன்னும்
மணக்கிறது
நொடிக்கொருமுறை
சுவாசிக்கிறேன்
எங்கும்
உன் மனம்
கைகள்
அழகானது
ரேகைகள்
பூ பூத்தது
உன்
தொடுகையால்
பொற்கை
பண்டியனனேன்
என் கையை
நானே
ரசித்தேன்
தொடுகையின்
கணங்களை
கைகளில்
சேமித்தேன்
கடவுளின்
ச்பரிசமென
துள்ளி குதித்தேன்
அறியாது
பட்ட
உன் கை
புரட்டியது
இத்தனை
மாற்றங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக